நடிப்பை நினைத்தால் பயமாக இருக்கின்றது : திரிஷா!!

540

trisha

தமிழ், தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் திரிஷா. இப்போதும் நாயகியாகவே இருந்து வருகிறார்.தற்போது ‘நாயகி’ படத்தில் நடித்து வருகிறார். அவரது பாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை காட்சிகளிலும் கலகலப்பூட்டுகிறார்.

“நான் இதுவரை எல்லா விதமான வேடங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் காமெடியை தவிர மற்றது எல்லாம் எளிது.காமெடியை பார்க்க எளிதாக தெரியும் ஆனால், நடிப்பது சவாலானது. காமெடி காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று நினைத்தாலே பயம் வந்து விடும்.

ஜெயம் ரவியுடன் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ஓரளவு காமெடி செய்தேன். இப்போது ‘நாயகி’ படத்தில் அதிகமான நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறேன். இதிலும் பயந்து பயந்துதான் நடித்தேன். என்றாலும் நான் நடித்த போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் நான் நடித்த காமெடியை ரசித்தனர்.எனவே, தியேட்டரிலும் அனைவரும் இந்த காமெடியை ரசிப்பார்கள் என நம்புகிறேன். இனி, அதிகமான காமெடி படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.