23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி நகரை சென்றடைந்தன..(படங்கள்)

728

இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சியை சென்றடைந்தன.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன.

கிளிநொச்சிக்கான புகையிரத நிலையம் அமைக்கும் பணியும் பூர்த்தியாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 2 3 4