தற்கொலை செய்யத் துணிந்த யுவதியை காப்பாற்றிய தொழிலாளர்கள்!!

654

 
காசல்றி நீர்தேக்கத்திற்கு நீரேந்தி வரும் கெசல்கமுவ ஓயாவில் பாய்ந்து, தற்கொலை செய்யத் துணிந்த யுவதியை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் நோர்வூட் – நியுட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கெசல்கமுவ ஓயாவில் பாய்ந்துள்ள குறித்த யுவதி நீரில் அடித்துச் செல்லப்பட்டு கல் ஒன்றில் சிக்குண்ட நிலையில் தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரல் எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோர்வூட் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் யுவதியைக் காப்பாற்றியுள்ளனர்.

பின்னர் இவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யுவதியை கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 12 13