
புதுக்கடை நீதிமன்றம் அருகில் போலிச் சான்றிதழ் அச்சகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.10,000 ரூபாய் தொடக்கம் இந்த போலிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை நீதிமன்றத்தை அண்மித்த இரண்டு மாடிக் கட்டிடத்திலேயே குறித்த போலிச் சான்றிதழ் அச்சகம் இயங்கி வந்துள்ளதாகவும், பதிவாளர் பணிப்பாளரின் முத்திரைக்கு சமனான முத்திரைகளும் அங்கிருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சுற்றிவளைப்புக்காக இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினதும், பொலிஸாரினதும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நடாத்தி வந்த நபரும், அவரது தந்தையையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், குறித்த இடத்தில் பிறப்பு பதிவுச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





