யாழில் வெசாக் கொண்டாட்டங்களை பாரியளவில் நடாத்த ஏற்பாடு!!

703

Vesak

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி வெசாக் கொண்டாட்டங்களை பாரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கு தொடக்கம் நாகவிகாரை வரை வெசாக் வலயம் அமைக்கப்படும் எனவும் வடக்கில் 12 விகாரைகளில் வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல்வேறு இடங்களிலும், 61 தானசாலைகள் அமைக்கப்படும். ஒன்பது சிரமதான நிகழ்வுகள், ஆறு சில் ஓதும் நிகழ்வுகள், 85 வெசாக் விளக்குகள், எட்டு வெசாக் விளக்கு போட்டிகள், பக்திப்பாடல், போதி பூஜைகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.