குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய விராட் கோஹ்லி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய கோஹ்லி, டிவில்லியர்ஸ் இருவரும் சதம் விளாசினர்.
கோஹ்லி 55 பந்தில் 109 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 8 சிக்சர்), டிவில்லியர்ஸ் 52 பந்தில் 129 ஓட்டங்களும் (10 பவுண்டரி, 12 சிக்சர்) எடுத்தனர்.
இது கோஹ்லி இந்த தொடரில் விளாசிய 3வது சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு சீசனில் 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
மேலும், 11 ஓட்டங்களை எடுத்த போது இந்திய வீரர் ஒரு சீசனில் அதிகபட்சமாக வைத்துள்ள ஓட்டங்கள் சாதனையையும் அவர் முறியடித்தார்.
11 இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள கோஹ்லி 75, 79, 33, 80,100*, 14, 52, 108*, 20, 7 மற்றும் 109 என மொத்தம் 677 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் குஜராத் அணியை 104 ஓட்டங்களில் சுருட்டிய பெங்களூர் அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.






