சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாத காரணத்தினால் நடிகர் சூர்யா மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் நடிகர் சூர்யா வாக்களிக்கவில்லை.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் இருப்பதால் முதல் முறையாக வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இது தனக்கு குற்ற உணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு தற்போது தன்னால் அதனை செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள்தங்களது வாக்குரிமையை நிறைவேற்ற வீடியோக்கள் மூலம் நடிகர் சூர்யா விழிப்புணர்வு எற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






