வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி!!

418

Karthi

கார்த்தி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கார்த்தி தற்போது காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் விவேக் இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மணிரத்னம் படத்திற்கு முன்பே சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இதுகுறித்து கார்த்தி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடித்து வரும் காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் முடிவடையவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்கள். மேலும் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.