
தனது விருப்பத்திற்குள்ளான கட்சி ஆட்சியை பிடிக்கவேண்டும் என பல தொண்டர்கள் மொட்டை அடிப்பது, அலகு குத்துவது என வேண்டுதல் வைப்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் நிகழ்வது வழக்கம் தான்.
ஆனால், அதிமுக தொண்டரான எஸ்.சதீஷ் என்பவர் விளம்பர பலகை ஒன்றை அமைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதில், ‘2016 மீண்டும் எங்கள் அம்மா ஆட்சிதான். இல்லையெனில் எனது நாக்கை அறுத்துக்கொள்கிறேன்.இப்படிக்கு அம்மாவின் அடிமட்ட தொண்டன்’ என வாசகங்களை எழுதியுள்ளார்.
பெயிண்டர் தொழில் செய்யும் இந்த வாலிபரின் விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகபரவி வருகிறது.எனினும்,வாலிபரின் இந்த விளம்பரம் கண்டிக்கத்தக்கது என்றும், இளைய சமுதாயத்தினருக்கு ஒருதவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என அதிமுக இணையத்தளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





