இந்தியாவின் இரண்டு கப்பல்கள் உதவிப் பொருட்களுடன் இலங்கை வருகின்றது!!

983

Ship

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.

ஐ.என்.எஸ். சட்லெஜ் மற்றும் ஐஎன்எஸ் சுனய்னா ஆகிய இரு கப்பல்களும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் எந்த நேரமும் உதவ தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவும் எனவும் உறுதியளித்துள்ளார்.

கொச்சி கடற்படை தளத்தில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்த இரண்டு கப்பல்களும் இலங்கை வருகின்றது என்று இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.