தயாரிப்பாளர் மீது நடிகை பிரபல நடிகை பாலியல் புகார்!!

495

Puvisha

படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகை புவிஷா புகார் தெரிவித்துள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண் புவிஷா மனோகரன். பரதநாட்டியம் கற்றவர். இவர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து தமிழ், இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேயின் தங்கை கதாபாத்திரத்தில் வந்தார்.

இந்த நிலையில் புவிஷாவுக்கு கன்னடத்தில் தயாரான ஜில் ஜில் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தை மது இயக்கினார். வெங்கடேஷ் பிரசாத் தயாரித்தார். உதய் பல்லால் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புவிஷா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

ஜில் ஜில் படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததில் இருந்தே தயாரிப்பாளர் வெங்கடேஷ் பிரசாத்தும், ஒளிப்பதிவாளர் உதய் பல்லாலும் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். படப்பிடிப்பில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார்கள். தயாரிப்பாளர் என்னை ஹோட்டல் அறைக்கு வரும்படி அழைத்தார்.

இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இருவர் மீதும் பொலிஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன் என்று புவிஷா கூறினார்.

புவிஷா பொலிசில் புகார் அளித்ததும் இருவரும் கைது செய்யப்படலாம் என்று கன்னட பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.