இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!!

476

England's James Anderson (third left) celebrates after taking the wicket of Dimuth Karunaratne during day three of the 1st Investec Test at Headingley, Leeds.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரின் முதலாவது போட்டி நேற்று முன்தினம் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. அந்தவகையில் முதலாவது இன்னிங்சில் 298 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 91 ஓட்டங்களுக்குள் சுருண்டு பாலோ-ஒன் ஆனது.

தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2 பந்து மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் குறைவான நேரத்திலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.