வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதவன்!!

416

madhavan

மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட சார்லி படத்தின் ரீமேக்கில் மாதவன் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்திக்கு மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிபெற்ற படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளிவருகிறது. அவ்வாறு உருவாகும் படங்களில் சில வெற்றியடைந்தாலும், பல படங்கள் தோல்வியையே தழுவுகின்றன. அப்படியிருந்தும், அப்படங்களை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்வம் கொஞ்சம்கூட குறையவே இல்லை.

அந்த வரிசையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட சார்லி படத்தையும் தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் தமிழில் மாதவன் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், தற்போது இந்த தகவலை மாதவன் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இப்படத்தில் யார் நடிப்பார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.