பூமியை தாக்க வரும் 20 இராட்சத விண்கற்கள்!!

702

BA00776

20 இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருவதாக ஸ்பெயின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வானில் ஏராளமான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி வருகின்றன. வரும் வேகத்தில் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில் ஓரிரு விண்கற்கள் பூமியை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய இராட்சத விண்கல் பூமியை தாக்கியது. 18 மீட்டர் அகலமும், 11 ஆயிரம் டன் எடையுடன் கூடிய அக்கல் ரஷியாவை நோக்கி வந்தது.

விஞ்ஞானிகளின் முயற்சியில் அந்த இராட்சத விண்கல் 460 டன்னாக உடைக்கப்பட்டு சிதறல்களாக பூமியில் விழுந்தது. அதன் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இக்கல் செலியாபின்ஸக் என அழைக்கப்படுகிறது. அது போன்ற 20 மிகப்பெரிய இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருகின்றன.
ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் கம்புலுடன்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி கார்லோஸ் டி லா புயன்டா மஸ்கோஸ் தலைமையிலான குழுவினர் இதை கண்டறிந்து எச்சரித்துள்ளனர்.

கடந்த 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய இராட்சத விண்பாறை ஒன்று சூரிய குடும்பத்துக்குள் வந்தது. சூரியன் அருகே வந்த போது கடும் வெப்பம் மற்றும் புவிஈர்ப்பு விசையால் அந்த இராட்சத விண்பாறை பல துண்டுகளாக நொறுங்கியது.

தற்போது அவற்றில் சில விண்வெளியில் மிதிக்கின்றன. அவற்றை கடந்த 2011ம் ஆண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதற்கு 2011 EO 40 என பெயரிட்டனர். அவ்வாறு மிதக்கும் 20 இராட்சத விண்கற்கள்தான் பூமியை தாக்கும் நிலையில் அச்சுறுத்தி வருகின்றதாம்.