சுருதிஹாசன், சபாஷ் நாயுடு படத்தில் அவருடைய தந்தை கமல்ஹாசனுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கம் படத்தின் 3ம் பாகமாக தயாராகும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். தெலுங்கு, இந்தியிலும் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்திப் படங்களில் அவர் கவர்ச்சியாக வருவதாக விமர்சனங்கள் வெளிவந்தநிலையில். சமீபத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் இணைய தளங்களில் பரவி உள்ளன. இதுகுறித்து சுருதிஹாசனிடம் தெரிவித்தபோது..
‘‘நான் கவர்ச்சியாக இருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாகத் தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சிதான். நடிகைகள் கவர்ச்சியை மட்டுமே நம்பிக்கொண்டு சினிமாவில் நீடிக்க முடியாது. கவர்ச்சியும், திறமையும் சேர்ந்து இருக்க வேண்டும்.
என்னை பார்த்து யாரேனும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன். ஆனாலும் கவர்ச்சியின் எல்லை எனக்கு தெரியும். அதை மீற மாட்டேன். எனது ரசிகர்கள் நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு முக்கியத்துவம் தருவேன். அவர்கள் எனக்கு ஒரு நடிகையாக மனதில் இடம் தந்தால் போதும்” என்று சுருதிஹாசன் தெரிவித்தார்.






