
சந்தானத்துக்கு ஜோடியாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். இப்படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளிவந்த உத்தமவில்லன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த தகவலை பார்வதி நாயர் மறுத்துள்ளார். சந்தானம் நடிப்பில் தற்போது தில்லுக்கு துட்டு படம் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் படப்பிடிப்பிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்விரு படங்களுக்குப் பின்னர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்திலும் சந்தானம் நடிக்கவுள்ளார். இந்த படத்தில்தான் பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை என்றும், சந்தானம் நடிக்கும் எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.





