இணையங்களால் மன நோயாளிகள் அதிகரிப்பு!!

440

angrywoman

இணையப் பாவனையால் மன நோளாளிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு உள தாக்கங்களால் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, தற்போதையை காலக்கட்டத்தில் இணையப் பாவனைகளால் புதுவித மன நோயாளிகள் உருவாகி வருவதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிறப்பு உளவியல் வைத்தியரான ரமணி ரத்னவீர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே வைத்தியர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, ஆசிய நாடுகளில் 45 வீதமானோர் “இன்டநெட் எடிக்ஸன் சின்ட்ரோம்”என்ற மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரிய நாட்டிலே இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சிறுவர்களும் இணையப் பாவனைக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் ரமணி ரத்னவீர குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறித்த மனநோயால் மூளை செயலிழப்பதாகவும், இறுதியில் இந்த நோயால் மரணங்கள் சம்பவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.