தொடர் மழையினால் மரக்கறிகளின் விலை உயர்வு!!

693

3__1_

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் மலையகத்தின் ஹட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தம்புள்ளை பகுதியில் மரக்கறி பயிர்செய்கை வீழ்சியடைந்துள்ளதால் தம்புள்ளையிலிருந்து மலையக நகரங்களுக்கு மரக்கறிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் நுவரெலியா, வெளிமடை, வெள்ளவாய, பண்டாரவளை பகுதிகளிலிருந்தே குறிப்பிட்ட அளவிலான மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடிக்கின்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சகல மரக்கறி வகைகளும் 160 ரூபாய்க்கு மேல் விலையேற்றம் பெற்றுள்ளதுடன் போஞ்சி ஒரு கிலோ 270 ரூபாய், கறிமிளகாய் ஒரு கிலோ 280 ரூபாய், கரட் 1 கிலோ 200 ரூபாய், தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.