கம்பஹாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் சீ பிளேன்!!

500

21450

கம்பஹா மாவட்டத்தில் இம்முறை அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட ஏதுவாக அமைந்ததுசீபிளேனை தரை இறக்குவதற்கு அமைக்கப்பட்ட மணல் திட்டே காரணம் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மணல் திட்டானது தடுகம் ஓயாவை மறித்து குறுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மணல் திட்டை உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மணல்திட்டை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின்பணிப்புரைக்கமைய நேற்றைய தினம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தடுகம் ஓயாவை மறித்து கட்டப்பட்ட குறித்த மணல்திட்டே கம்பஹாமாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என கடந்த வாரம் இடம்பெற்றகலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்தேஇதை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.