யுவராஜ் சிங்கின் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்!!

460

Glenn Phillips

இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் 19 வயது நியூசிலாந்து வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் மெர்ல்ன்போர்ன் கிரிக்கெட் கிளப் சார்பாக ஆடிய 19 வயதேயான கிளென் பிலிப்ஸ் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி இவர்கள் சாதனையை சமன் செய்துள்ளார்.

தொடர்ந்து அசத்திய அவர் Duke of Norfolk XI அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 123 பந்தில் 201 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்னாபிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவரான கிளென் பிலிப்ஸ், அண்மையில் வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார்.

ஒக்லாந்து அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சதமும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.