
மாலபே பிரதேசத்தில் நடாத்திச் சென்ற விபச்சார விடுதிக்கு குறித்தப் பிரதேச மக்கள் கல்லெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் மாலபே ரொபட் குணவர்த்தண மாவத்தையில் குறித்த விபச்சார விடுதியை நடாத்திச் செல்பவர் அரசியல்வாதி ஒருவரின் செயலாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொள்ளுப்பிட்டியிலிருந்து குறித்த விபச்சாரிகள் அழைத்து வரப்படுவதாகவும், இவர்கள் வெளிநாட்டுப் பெண்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களும், இலங்கையில் உள்ள செல்வந்தர்களுமே குறித்த விபச்சார விடுதியை தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தங்கும் விடுதியாகவே குறித்த விபச்சார விடுதி நடாத்தி வந்துள்ளதாகவும், இதற்கு அண்மையில் இரண்டு பிரதான பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





