16 வயதுச் சிறுமியை 30 பேர் பலாத்காரம் செய்தனரா? உச்சக்கட்ட அதிர்ச்சியில் பொலிசார்!!

444

Rape1
பிரேசில் நாட்டில் 16 வயது சிறுமியை 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்பழித்துள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அந்நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரேசில் நாட்டு கடற்கரை ஓரத்தில் Rio de Janeiro என்ற நகர் அமைந்துள்ளது. இதே நகரில், பெயர் வெளியிடப்படாத 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை சந்திப்பதற்காக கடந்த சனிக்கிழமை அன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.சிறுமி வந்ததும் அவருக்கு தெரியாமல் வாலிபர் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.இதன் பிறகு சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். ஆனால், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நினைவு வந்து எழுந்தபோது, அவர் வேறொரு வீட்டில் வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுமட்டுமில்லாமல், தனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் தன்னை சுற்றி எண்ணற்ற நபர்கள் நின்றுக்கொண்டு இருந்ததை கண்டு சிறுமி அலறியுள்ளார்.உடனடியாக அங்கிருந்து வெளியேறிய சிறுமி தனது வீட்டை அடைந்து தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு முன்னதாகவே சிறுமியை கற்பழித்ததாக கூறப்படும் அந்த நபர்கள் அந்த சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவை சிறுமியின் குடும்பத்தினரும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்த அது உடனடியாக நீக்கப்பட்டது. சுமார் 40 வினாடிகள் பதிவாகியுள்ள வீடியோ பொலிசாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியிடம் தொடர்புடைய வாலிபர் உட்பட தற்போது 30க்கும் அதிகமான நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பிரேசில் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு மட்டும் காவல் துறையில் 47,636 கற்பழிப்பு புகார்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.