பலாத்காரம் செய்தவரை திருமணம் செய்துக்கொள்ள மகளை வற்புறுத்திய தந்தை : நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

441

Small-Girl-Raped-In-Hafizabad
அமெரிக்க நாட்டில் கற்பழித்த நபரையே திருமணம் செய்துக் கொள்ள மகளை கட்டாயப்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது.Idaho மாகாணத்தை சேர்ந்த கெய்த் ஸ்ட்ரான் என்பவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தந்தை வெளியே சென்றுருந்த நேரத்தில் 14 வயதான மகளை 25 வயதான நபர் ஒருவர் கற்பழித்து விட்டார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் தந்தைக்கு தெரிய வர அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Idaho மாகாண சட்டப்படி 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்வது குற்றமாகும். இதனை சிந்தித்து பார்த்த தந்தை ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.உடனடியாக கர்ப்பமான மகள் மற்றும் அவரை கற்பழித்த நபரை அழைத்துக்கொண்டு 1,000 மைல்கள் கடந்து Missouri மாகாணத்திற்கு சென்றுள்ளார். ஏனெனில், இந்த மாகாணத்தில் சில விதிமுறைகளை பின்பற்றி 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளலாம். மேலும், கற்பழித்த நபரையே திருமணம் செய்துக்கொள்ளும்படி தந்தை மகளை மிகவும் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், மகளுக்கு இதில் விருப்பம் இல்லை.

இந்நிலையில், சிறுமியின் கர்ப்பம் திடீரென கலைந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இறுதி வாதத்திற்கு பிறகு, 14 வயது சிறுமியை கற்பழித்த 25 வயதான நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், மகளை திருமணத்திற்கு வற்புறுத்திய தந்தை மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, கற்பழித்த நபரையே மகளின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக தந்தைக்கு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.