
கிறிஸ்தவ மத அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவரும் இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற திருநங்கையர் அழகிப்போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வாகியுள்ளார்.இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நேற்று அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தேசிய திருநங்கையர் அழகிப்போட்டி நடைபெற்றது. இறுதிச்சுற்றில் மொத்தம் 12 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வானார்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான தலீன், இந்த வெற்றி பற்றி குறிப்பிடுகையில், ‘எனது உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையில் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர என்நாடு அனுமதியளித்தது.இந்த போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் பார்செலோனா நகரில் நடைபெறும் உலக திருநங்கையர் போட்டியில் கலந்துகொண்டு எனது தாய்நாட்டுக்கு வெற்றியை தேடி தருவேன்’ என்று கூறினார்.





