புற்று நோய் பாதிப்பை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள்!!

532

OLYMPUS DIGITAL CAMERA

நாயின் மோப்ப சக்தியின் உதவியோடு கர்ப்பப்பை புற்று நோயை கண்டறியலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோய் பாதிப்புகள் பெரும்பாலான நேரங்களில் காலதாமதமாக கண்டறியப்படுவதால் நோய் பாதித்தவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் போவதும், இதனால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்ப்பபை புற்றுநோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.

இதன்படி கர்ப்பபை புற்றுநோயை உருவாக்கும் செல்கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. இதை சோதனை முயற்சியில் நடைமுறைபடுத்தியப்போது நாய்களால் மோப்பம் பிடித்து புற்றுநோய் பாதிப்பு உள்ளது என உறுதி செய்த பெண்களின் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருந்தது தெரியவந்தது.

அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்ப்பபை புற்றுநோயை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
பெண்களை தாக்கும் கர்ப்பபை புற்றுநோய் பெரும்பாலான நேரங்களில் காலதாமதமாக கண்டறியப்படுவதால் நிறைய உயிரிழப்புகள் நேரிடுவதால் நாய்களின் உதவியோடு புற்று நோயை கண்டறியமுடியுமென்பது மருத்துவ துறையில் மைல்கல்லாக இருக்குமென்று தெரிவிக்கப்படுகின்றது.