கொழும்பு புறநகர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து தற்போது துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலைமையானது கொழும்பின் புற நகர் பகுதிகளான கொடிகாவத்தை ,முல்லேரியா,கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அசௌகரிய நிலைக்கு மாநகராட்சியிடம் இருந்து எந்த சேவைகளும் கிடைக்கப் பெறவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். கொழும்பில் இருந்து எடுத்துச் செல்லப்படும் குப்பைகள் இந்த பிரதேசங்களில் கொட்டப்படுவதே இந் நிலைக்கு காரணம் என பிரதேச மக்கள் மேலும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த பிரதேசத்தில் நேற்றிரவு முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மீண்டும் வீதியில் திரண்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் கடும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.






