ஒரு புகைப்படத்தால் ஹீரோவான கனடிய பொலிஸ்!!

516

Canada police

கனடாவில் பொலிஸ் ஒருவர் ஊனமுற்ற நபரோடு ரோட்டில் அமர்ந்து பேசியது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கனடாவின் Halifax பிராந்திய நகராட்சியை சேர்ந்த பொலிசான Shawn Currie என்பவர், தெருவோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக இரண்டு கால்களையும் இழந்த நபர், அமர்ந்தபடியே கைசக்கரத்தினை பயன்படுத்தி ரோட்டோரமாக வந்துள்ளார், இதனைப்பார்த்த Shawn Currie சற்றும் யோசிக்காமல் அந்த ஊனமுற்ற நபருடன் தரையில் அமர்ந்து பேசியுள்ளார்.

இதனை சக பொலிஸ் ஒருவர் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த பலரும், மனித இதயம், இந்த புகைப்படம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம், மனித நேயம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறதுஎன தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புகைப்படத்தினை 100 பேர் ரீடுவிட் செய்துள்ளனர், இதுகுறித்து Currie கூறியதாவது, எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் நன்றாக தெரியும், அவருடன் அமர்ந்து தற்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரித்துக்கொண்டிருந்தேன்.

இது எங்களுக்குள் நடந்த ஒரு பொதுவான உரையாடல் தான், ஆனால் இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

Canada police - Copy