இங்கிலாந்துடனான போட்டியில் சந்திமால் அபார சதம்!!

510

Sandimal

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சார்பில் டினேஷ் சந்திமால் சற்று முன்னர் தனது ஆறாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

பலோ ஒன்னில் தனது இரண்டாவது இனிங்ஸை தொடரும் இலங்கை அணி மதிய உணவு இடைவேளையின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 403 ஓட்டங்களை குவித்திருந்தது. சந்திமால் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் ரங்கன ஹேரத் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

முன்னதாக தனது முதலாவது இனிங்ஸில் இலங்கை அணி சகல் விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.