ஆறுகளின் நீர்மட்டம் இயல்புநிலைக்குத் திரும்பியது!!

745

Mahaweli_River_at_Gannoruwa_Sri_Lanka (1)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக உயர்ந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. களுகங்கையின் மில்லகந்த பிரதேசத்தில் மாத்திரம் தொடர்ந்தும் சற்று வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது.

இதற்கிடையே மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய இடங்களை வரைபடமாக தயாரிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த வரைபடத் தகவல் தயாரிப்பில் கடற்படையினரின் உதவியும், கள ஒருங்கிணைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள், களனி மற்றும் அத்தனகல ஆற்றோரங்கள் என்பவற்றில் தற்போதைக்கு கடற்படையின் விசேட பயிற்சி பெற்ற பிரிவினர் வரைபடத் தயாரிப்பு மற்றும் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.