1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்!!

392

sri-lanka-passport
வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்த பிரஜாவுரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் வசிக்கும் 1885 இலங்கைப் பிரஜைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.