
தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த ஒருவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பல்லம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இரவு 08.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், பல்லம – மண்டலான பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பெண் சிலாபம் – பங்கதெனிய பகுதியிலுள்ள அரச நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும், தற்கொலை செய்து கொண்ட அவரது கணவர் வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று அண்மையில் நாடு திரும்பிய ஒருவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.காணிப் பிரச்சினை ஒன்றே சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





