
கேரளாவில், சொத்து தகாராறு காரணமாக சொந்த தந்தையை, மகன் கொன்று துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.ஜாய் வி ஜான்(வயது-68)பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்துள்ளார், சமீபத்தில் கேரளாவின், செங்கன்னூர் பகுதியில் உள்ள தனது பரம்பரை வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்கள் முன் வெளியே சென்ற தனது மகன் Sherin ஜானையும் தனது கணவர் ஜாய் வி ஜானையும் காணவில்லை என அவரது மனைவி மாரியம்மா பொலிசில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்த பொலிஸ் விசாரணை நடத்த தொடங்கிய போது, தான் தன் தனது தந்தை கொன்றதாக 36 வயதான Sherin பொலிசில் சரணடைந்துள்ளார். sherlin ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சொத்து தகராறு காரணமாக Sherin தந்தையை கொன்றதாகவும், ஜாய் வி ஜானின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் அருகில் உள்ள இடங்களில் புதைத்ததாகவும் கூறியுள்ளார். sherlin உதவியுடன் புதைக்கப்பட்ட ஜானின் உடல் பாகங்களை பொலிசார் கண்டெடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் sherlin மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.





