தனது சேவையை விஸ்தரிக்கும் அப்பிள் நிறுவனம்!!

556

iphone-6s-plus-home-screen-hero

கணணி சாதனங்களின் உற்பத்தியை தாண்டி வேறு சில சேவைகளையும் அப்பிள் நிறுவனம் வழங்கி வருகின்றமை அறிந்ததே.அதில் ஒன்றுதான் அந் நிறுவனத்தின் உற்பத்திகளை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடிய Apple Pay சேவையாகும்.இச் சேவையானது தற்போது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

அப்பிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள இச் சேவையை மேலும் சில நாடுகளுக்கு விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அவை எந்த நாடுகள் என்ற தவகல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.