சச்சினின் சாதனையை முறியடித்த குக்!!

485

Alastair-Cook

இளம் வயதில் 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் அலஸ்டயர் குக் முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சச்சின், டிராவிட், இலங்கை வீரர்கள் சங்கக்கார, மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் லாரா, சந்தர்போல் போன்றோர் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 என்ற மைற்கல்லை எட்டியது கிடையாது.

இங்கிலாந்து அணித்தலைவர் குக் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

சச்சின் 10,000 ஓட்டங்களை கடந்த போது அவரின் வயது 31 ஆண்டுகள், 10 மாதம் மற்றும் 20 நாட்கள் ஆகும். நேற்று 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ள குக்கின் வயது 31 ஆண்டுகள், 5 மாதம் ஆகும். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 10,000 ஓட்டங்களை கடந்தவர் என்ற பெருமையை குக் பெற்றுள்ளார்.