பயண சீட்டின்றி ரயிலில் பயணித்தால் 3,000 ரூபாய் தண்டப்பணம்!!

366

Train-TIcket

பயண சீட்டின்றி ரயிலில் பயணிக்கும் போது அறவிடப்படும் தண்டப்பணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயண சீட்டின்றி ரயிலில் பயணிப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பயண சீட்டின்றி பயணித்தல், உரிய வகுப்புகளில் பயணிக்காமை, எடுக்கப்படும் பயண சீட்டுகளுக்கு மாறாக அதிக தூரம் பயணித்தல் ஆகிய குற்றங்களின் போது இந்த தொகை தண்டப்பணமாக அறவிடப்படவுள்ளது.