
மருமகனால் தாக்கப்பட்ட ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி இன்று (02) உயிரிழந்துள்ளார்.கடந்த மாதம் 25ஆம் திகதி குறித்த பொலிஸ் அதிகாரியின் மருமகன் தனது மனைவியையும், மாமியாரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதன்போது குறித்த நபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரியின் மனைவி பலத்த காயங்களுக்குள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.மேலும் இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




