
வாகனங்களின் விலை அதிகரிப்பை தான் பத்திரிகை வாயிலாகவே அறிந்துக்கொண்டதாக பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.அத்துடன் எனது அமைச்சுப் பதவிக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.இதேவேளை , வாகனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சர் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்கூட்டியே நடத்தவில்லை என்று தெரிவித்த பிரதிஅமைச்சர் வரி அதிகரிப்பே வாகனங்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று நிதிஅமைச்சர் கூறும் கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




