வெள்ளம் வரும் விடயம் முன்கூட்டியே தெரிந்தமையால் தான் பாராளுமன்றத்தை பாதுகாத்தோம் – அமைச்சர் சம்பிக்க!!

921

sampika
சீரற்ற காலநிலையினால் வெள்ளம் ஏற்படக்கூடும் என முன்கூட்டியே தெரிந்துக் கொண்டமையால் பாராளுமன்றத்தையும், அதனைச் சூழுவுள்ள பிரதேசத்தையும் பாதுகாக்க முடிந்ததாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.மேலும், எமது உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் வெள்ள நிலைமையின் போது செயற்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட அதிகமான இடங்களுக்கு தனியாகவும், குழுவாகவும் சென்று பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்கள் எனவே அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் குநிப்பிட்டுள்ளார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அனர்த்த நேரத்தின் போது விமானப்படையினர், இராணுவத்தினர்மற்றும் கடற்படையினர்,பொலிஸாரின் சேவைகள் அளப்பரியதாகக் காணப்பட்டது. எனவே அவர்களுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை 19 ஆம் திகதி பெய்த அடைமழையின் போது பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாம் அனைவரும் யோசித்தோம்.இதேப்போல் தான் 2010இல் பாராளுமன்றம் வெள்ளத்தால் மூழ்கியதால் பல நட்டங்கள் எமக்கு ஏற்பட்டது.ஆனால், இம்முறை கடற்படையினர் முன்கூட்டியே பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனால் தான் பாராளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து மீட்டெடுக்க முடிந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இன்று உலக நாடுகள் அனைத்தும் இயற்கை அனரத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளதை நாம் அறிவோம் இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல.ஆனால், ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க எம்மால் முடியும்.

அதனால் தான் கொழும்பு நகரில் காணப்படும் சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.