காதல் திருமணத்திற்கு பரிசாக கிடைத்த மரணம்!!

936

lovelydisgrace.com - acidente fatal- imagens fortes
திருச்சி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.லால்குடி வட்டம், டால்மியாபுரம் அருகேயுள்ள கல்லகம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் இளையராஜா (26). லாரி ஓட்டுநர்.இவர் இதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தியை (17) காதலித்து, கடந்த 21-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு நிலவியது.இந்நிலையில், ஆனந்தியின் அண்ணன் அருண், இளையராஜாவை அடித்து கொலை செய்துள்ளார்.தகவலின் பேரில், பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இளையராஜாவின் உறவினர்கள் கல்லக்குடி காவல் நிலையம் முன்புசாலை மறியலில் ஈடுபட்டனர்.கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக பொலிசார் உறுதி அளித்ததன் பேரில், மறியல் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக கல்லக்குடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.