தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை கௌரவிக்க அஞ்சல் தலை வெளியிட மலேசியா அரசு முடிவு செய்துள்ளது.
அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன.
அங்கு வாழும் மலாய் மற்றும் தமிழ் மக்களிடம் ரஜினி நன்றாக பேசி மகிழ்ந்தார். மேலும், ரஜினி படத்துக்காக பல்வேறு இடங்களில் படம்பிடிக்க சிறப்பு அனுமதியும் அந்நாட்டு அரசு அளித்தது.
இந்த நிலையில் ரஜினியைக் கெளரவிக்க சிறப்பு அஞ்சல் தலை வெளியிடவும் மலேசியா அரசு முடிவு செய்துள்ளது.






