சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக துபாய் பறந்த சிறுவன் : காரணம் என்ன?

460

Emirates

சீனாவை சேர்ந்த 16 வயது சிறுவன் துபாய் செல்லும் விமானத்தின் கார்கோ பகுதியில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த ஜூ என்ற சிறுவனே இவ்வாறு பயணம் செய்துள்ளார். சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து துபாய்க்கு சென்ற எமிரேட்ஸ் விமானத்தின் சரக்குப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். விமானம் துபாயை அடைந்த போது தான் சிறுவன் பயணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், துபாயில் பிச்சை எடுத்தால் கை நிறைய காசு கிடைக்கும் என கேள்விபட்டேன், இதனால் துபாய் வர முடிவு செய்தேன். ஆனால் சீனாவில் இருந்து துபாய் வருவதற்கு பணம் இல்லாததால் சரக்கு பகுதியில் ஒளிந்து கொண்டு வந்தேன் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே பொலிஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.