
பொலன்னறுவை-கங்கயாய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனது மகனின் வீட்டிற்கு சென்றிருந்த போதே குறித்த பெண், யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.





