6000 தொன்களாக அதிகரித்த குப்பைகள்!!

600

Garbage

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2500 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த நான்கு நாட்களாக 6,000 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு இன்று (05.06) கூறியுள்ளது.

இதேவேளை, அதிகளவான குப்பைகள் கோடிகாவத்தை, கொலன்னாவ, மீதொட்டுமுல்லை, சேதுவத்தை, கொகிலவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் காணப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த குப்பைகளை மீட்க்கும் பணிகளுக்காக 100 இற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதன்போது, இராணுவம், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு ஆகியன இணைந்து, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.