கொஸ்கம இராணுவ முகாம் தீ விபத்து : ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் வைத்தியசாலையில்!!

583

Camp fire

கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறுசிறு உபாதைக்குள்ளான 39 பேர் சிகிச்சையின் பின் வைத்தியசாலையை விட்டு வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.