
காலி – இமாதுவப் பகுதியில் உள்ள நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில், சுமார் 40,000 ரூபா பெறுமதியான பணத்தை மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று திருடிச் சென்றுள்ளனர்.இவர்களில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளடங்குவதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றுலாப் பயணிகள், நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் கொள்வனவு செய்வதில் தமக்கு மிகுந்த ஆர்வம் எனக் கூறியதோடு, “எங்களிடம் வெளிநாட்டு நாணயங்கள் மாத்திரமே இருக்கின்றன, உள்நாட்டு நாணயங்களை எங்களுக்கு காண்பியுங்கள் என்றும் உரிமையாளரிடம் கேட்டுக் கொண்டபோது, அவரும் இதற்கு சம்மதித்துள்ளார்.கடையை நன்கு அவதானித்த வெளிநாட்டவர்கள் எங்களது பணத்தை உள்ளூர் பணமாக மாற்றி மீண்டும் கடைக்கு வருகின்றோம் என கூறி விட்டு கடையை விட்டுச் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடையை விட்டுச் சென்ற பின் குறித்த உரிமையாளர் தன் பாதுகாப்பில் இருந்த 40,000 ரூபா காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.சம்பவம் தொடர்பில் இமாதுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





