நாட்டின் பல பகுதியில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய, இடி மின்னல் தாக்குதல்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு, வடமேற்கு, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள்இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டல திணைக்களத்தின் நிபுணத்துவரான உதேனி வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான காற்றும் வீசக்கூடுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடி மின்னல் தாக்குதல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வரையறுக்க மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






