ஊடகங்கள் விளம்பரங்களை மட்டுமே மையமாகக் கொண்டு சிறுவர் தொடர்பான செய்திகளைவெளியிட்டு வருவதாகவும் எனவே அதற்கு சிறுவர்களை பலியாக்க வேண்டாம் எனவும்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த ஊடகங்கள் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைத்து பார்க்கதவறுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவை ராஜகீய வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர்களுக்கான தேசிய தலைமைத்துவ பயிற்சிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறுவர்கள் விடயத்தில் அனைத்து ஊடகங்களும் அவதானமான நடந்துக் கொள்வதுமிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய தொழில்நுட்பத்துடனான இந்த சமூகத்தில் சிறுவர்களை பராமரிப்பில் பற்றாக்குறைகள் நிலவுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ஜனாதிபதிசுட்டிக்காட்டியுள்ளார்.






