இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 362 ஓட்டங்களை வெற்றி இலக்காக வைத்துள்ளது
லோட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ஓட்டங்களையும், இலங்கை அணி 288 ஓட்டங்களையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 71 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹால்ஸ் 94 ஓட்டங்களும், அணித்தலைவர் குக் 49 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். சமிந்த எரங்க, நுவன் பிரதீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து இலங்கை அணிக்கு 362 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக கருணாரத்னே, கெளஷால் சில்வா ஆகியோர் களமிறங்கினர்.
நேற்றைய 4வது நாள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களில் 32 ஓட்டங்கள் பெற்றிருந்தது. கருணாரத்னே 19 ஓட்டங்களுடனும், கெளஷால் சில்வா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இறுதிநாள் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. சற்று முன்னர் வரை இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.
ஏற்கனவே இங்கிலாந்து தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.