சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!!

315

OL

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.தொழிற்சங்க போராட்டம் காரணமாக உரிய நேரத்தில் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கா விட்டாலும் அதனால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

விண்ணப்பப் படிவங்கள் உரிய நேரத்தில் கிடைத்தால் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக அமையும் என்ற போதிலும், இதனால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னதாக தபால் திணைக்களத்தின் திகதியிடப்பட்ட முத்திரையுடன் தபாலுக்கு அனுப்பி வைத்திருந்தால், அந்த அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தபால் திணைக்கள ஊழியர்கள் பாரியளவில் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக் கணக்கான தபால்கள் தேங்கிக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.