பொது மன்னிப்பு காலத்தின் கீழ் முப்படைகளையும் சேர்ந்த 2763 பேர் சட்டரீதியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முப்படைகளிலிருந்தும் தப்பிச் சென்றிருந்த வீரர்களை உத்தியோகபூர்வமாக பதவியிலிருந்து நீக்குவதற்கு கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ வீரர்கள் சட்டரீதியாக பதவியிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்கள் 118 பேரும், கடற்படை வீரர்கள் 71 பேரும் குறித்த காலப் பகுதியில் சட்டரீதியாக பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த பொதுமன்னிப்பு காலம் அடுத்த மாதம் 12ம் திகதி வரை நடைமுறையில் இருப்பதுடன், முப்படைகளிலிருந்தும் சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ள வீரர்கள் அதற்கு முன்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி இராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றி இராணுவ படைப்பிரிவுக்கும், விமானப்படை விமானப் படை தலைமையகத்துக்கும், கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமிற்கும் வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அத தெரன-






